600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
"தாம் தூம் பட நாயகி கங்கனா ரனாவத், சமத்துப் பிள்ளை போல் தோற்றமளித்தாலும், ஊமைக் குசும்புகள் செய்வதில் கில்லாடி. ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக, ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பாரீசில் நடந்தது. ஒரு காட்சியில் நடிக்கும்போது, அவருக்கு அடிபட்டு விட்டது. துடி, துடித்து கீழே விழுந்து விட்டார். இயக்குனர் உட்பட, ஒட்டு மொத்த படப்பிடிப்பு குழுவினரும் பதறி விட்டனர். ஆம்புலன்ஸ் கூட வந்து விட்டது. அதுவரை, மயக்கம் அடைந்தவர் போல், கீழே விழுந்து கிடந்த கங்கனா, திடீரென எழுந்து தன்னைச் சுற்றி நின்றவர்களை பார்த்து, கெக்கெ, பிக்கே என, சிரித்தார். "அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டேனாஎன, கமென்ட் வேறு அடித்தார். இயக்குனருக்கு வந்ததே ஆத்திரம். காச் மூச் என, கங்கனாவை, காய்ச்சி எடுத்து விட்டார். அப்புறம் என்ன, படப்பிடிப்பு முடியும் வரை, குரங்கு சேட்டைகளை ஒத்தி வைத்து விட்டு, உர்ர்..ரென உட்கார்ந்து பொழுதை கழிக்க வேண்டியதாகி விட்டது.