ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
"ஷோலே படத்தின் காதல் ஜோடிகளான தர்மேந்திராவும், ஹேமாமாலினியும், நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாகி விட்டனர். இவர்களது மூத்த மகள் இஷாவுக்கு, சமீபத்தில் தான் திருமணமானது. தர்மேந்திராவுக்கும், ஹேமாவுக்கும், திருமணமாகி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும், இன்னும், ஒருவர் மீது ஒருவர் காதலுடன் தான் இருக்கின்றனர். சமீபத்தில் "டிவி நிகழ்ச்சி ஒன்றில், இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், இருவரையும் நடனமாடும்படி கூறவே, ஹேமமாலினி, பரத நாட்டியத்தில் தேர்ந்தவர் என்பதால் அசத்தலாக ஆடினார். ஆனால், தர்மேந்திராவுக்கு வயதாகி விட்டதால் தடுமாறினார். உடனே சுதாரித்துக் கொண்ட ஹேமா, "பாலிவுட்டில், எத்தனையோ நடிகர்கள் நடனமாடலாம். ஆனால், தர்மேந்திரா அளவுக்கு நடனமாடும் நடிகர்கள் யாரும் இல்லை. இதை, நான் பெருமையாகவே கூறுகிறேன். நான் கூட, அவரின் நடனமாடும் ஸ்டைலைப் பார்த்து தான், காதல் வலையில் விழுந்தேன்என, அள்ளி விட்டார். கல்லானாலும் கணவர் அல்லவா?