Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கால் மரணம்

26 ஆக, 2012 - 10:25 IST
எழுத்தின் அளவு:

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. 1917-ம் ஆண்டு பிறந்தவர் ஏ.கே.ஹங்கால்.  சிறுவயது முதலே தியேட்டர்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த ஹங்கால், இந்தியா - பாகிஸ்தான் பிரிவுக்கு பின்னர் பெஷாவரில் இருந்து மும்பை வந்தார். தனது 50வது வயதில் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.1966ம் ஆண்டு தீஸ்ரி கஸம் எனும் படம் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த ஹங்கால் தொடர்ந்து நமக் ஹாரம், ஷாகீன், ஸோலே, ஆயினா, அவ்தார், ஆந்தி, பலிகா பந்து, நரம் கரம் உள்ளிட்ட 225 படங்களில் நடித்துள்ளார். 1970-90களில் குணச்சித்திர வேடங்களின் மூடிசூடா மன்னனாக ஹங்கால் விளங்கினார். சினிமா மட்டுமல்லாது டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தனது மனைவி இறந்தபின்னர் மும்பையில் பிளாட் ஒன்றில் தனது மகன் விஜய் ஹங்காலுடன் வசித்து வந்தார் ஏ.கே.ஹங்கால். விஜய் ஹங்காலும்(வயது 75) பிரபல இந்தி சினிமா புகைப்பட க‌லைஞர் ஆவார். அவரது மனைவியும் இறந்துவிட்டார். அப்பாவும்-மகனும் பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஹங்காலுக்கு கடந்த 2007ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாதம் ஒன்றுக்கு மருத்துவ செலவுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் தேவைப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு பணம் செலவழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஹங்காலின் நிலைமை பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்தார்.

உடல்நலம் தேறிய நிலையில் சமீபத்தில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இத‌னையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹங்கால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் கவலைகிடமாக இருந்து வந்தநிலையில் இன்று(26.08.12) அவர் காலமானார். மறைந்த ஏ.கே.ஹங்காலுக்கு பாலிவுட்டின் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் ஹங்காலின் கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஹங்காலின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in