Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

இந்தியில் அம்மாக்கள் படையெடுப்பு

Ex.celebrity re-entry in hindiஇங்கிலீஸ், விங்கிலீஸ் இந்தியிலும், தமிழிலும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த நேரத்தில் இந்தியில் அம்மா நடிகைகளின் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் கலர்புல்லாக இருந்த இந்தி சினிமா இப்போது கதைபுல்லாக மாறியிருக்கிறது. வெறும் நடனத்தையும், பாட்டையும், சண்டையையும் பார்த்து சலித்துப்போன இந்தி ரசிகர்கள் இப்போது நல்ல கதை அம்சமுள்ள படங்களையே எதிர்பார்க்கிறார்கள். சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே நல்ல கதை அம்சமுள்ள படங்கள்தான். அதனால் இந்தி இயக்குனர்கள் இப்போது நல்ல கதைகளை வைத்துக்கொண்டு அதற்கேற்ற நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் வெளிநாட்டில் கணவனைத் தொலைத்த ஆங்கிலம் தெரியாத பெண்ணின் போராட்டத்தை சொல்ல வருகிறது இங்கிலீஷ் விங்லீஷ். இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீதேவி தமிழ்நாட்டுக்காரர் என்பதால் இந்தியில் அமிதாப் நடித்த கேரக்டரில் தமிழில் அஜீத் நடித்து வருகிறார். ஸ்ரீதேவிக்காக சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் அஜீத் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சொந்தப் படம் தயாரித்ததால் பெரும் கடன் சுமையில்  இருக்கும் ஸ்ரீதேவி இந்த ஒரு படத்தின் மூலமே தன் கடன்களை அடைத்து விடுவார் என்றும் பேசிக் கொள்கிறார்கள். ஸ்ரீதேவி மகள்கள் நடிக்க வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதேவியே ரீ எண்ட்ரி கொடுத்து பாலிவுட்டையும், கோலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

இப்போது இந்த வரிசையில் மேலும் சில அம்மா நடிகைகள் வரத் தயாராக இருக்கிறார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பவர் மாதுரி தீட்சித், தன் வசீகர புன்னகையாலும், இடுப்பு வளைவாலும் ஒரு காலத்தில் இந்தியாவையே கட்டிப்போட்டவர். இப்போது அம்மாவாக ரீ எண்ட்ரியாகிறார். குலாப் கேங் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கணவனை இழந்த பெண் தன் மகனை பெரிய அளவில் படிக்க வைக்கிறார். அவன் ஒரு பெண்ணை காதலித்து அம்மா முன் நிறுத்துகிறான். மகனின் காதலி வீட்டிற்கு செல்லும் அம்மாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவன் காதலித்த பெண் ஒரு காலத்தில் அம்மாவால் தீவிரமாக காதலிக்கப்பட்டவரின் மகள். இப்படி போகுமாம் குலாப் கேங்கின் கதை. மாதுரி தீட்சித்திற்கு அடுத்தபடியாக ஜீனத் அமனும் அம்மா களத்தில் குதிக்கிறார். இவரும் இப்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.

Tags »
இந்தியில், அம்மாக்கள், படையெடுப்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in