ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் 105 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான், இப்போது ரோகித் ஷெட்டி இயக்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த போல்பச்சன் படம் மாபெரும் ஹிட்டானதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இந்நிலையில் ரோகித், ஷாரூக்கானுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதனால் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் சென்னை எக்ஸ்பிரஸ் படம் இப்போதே சுமார் ரூ.105 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் இணை தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் கூறுகையில், தற்போது இப்படத்திற்கான சாட்டிலைட் உரிமம், மியூசிக் உரிமம், திரையரங்கு உரிமை போன்றவை விற்பனையாகியுள்ளது. தற்போதைய கணக்கு படி சுமார் ரூ.105 கோடிக்கு இப்படம் விற்பனையாகியுள்ளது என்று கூறியுள்ளார்.