Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் »

கவர்ச்சி நடிகைகளின் வயிற்றில் புளியை கரைக்கும் நடிகை

* அப்பா சத்யராஜ் போல் இல்லாமல், மாறுபட்ட நடிகராக வருவேன்' என்று சொன்ன சிபிராஜ், தான் நடித்த படங்கள் எதுவும் திருப்பத்தை தராததால், அப்பா பாணியிலேயே "ஆன்ட்டி' கதாநாயகன் ரோல்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். "திருமணமாகியுள்ள இந்த நேரத்தில், தனக்கு திரையுலகம் திருப்புமுனையை தரும்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபி.

* டூயட் மூவிஸ் சார்பாக, தரமான படங்களை மட்டுமே தயாரிப்பது என்ற கொள்கையில், பிரகாஷ்ராஜ் உறுதியாக இருப்பதால், தங்களது திறமைக்கு போதிய வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சில நடிகர், நடிகையர் அவரை தொடர்பு கொள்கின்றனர். ஆனால், "வித்தியாசமான ரோல்களை மற்றவர்களுக்கு தர மாட்டேன்; அதில் நான் திறமை காட்ட வேண்டும் என்று தான் "ரிஸ்க்' எடுத்து படம் தயாரிக்கிறேன்' என்று, வெளிப் படையாக கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

* விநாயகர் கோவில்களில் பட பூஜைகள் நடைபெற்று வந்த நிலை மாறி, தற்போது முருகன் கோவில்களில் பூஜை நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், "அர்ஜுனன் காதலி' பட பூஜை, திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்றதை தொடர்ந்து, மேலும் சில படங்களின் பூஜை, வெவ்வேறு முருகன் கோவிலில் நடைபெற உள்ளது.

* தமிழ் சினிமா, தொடர்ந்து மேக்னா நாயுடுவை துரத்தி அடிப்பதால், தற்போது தெலுங்கில் அம்மணி ஆழக்கால் பதித்துள் ளார். என்றாலும், தமிழ் சினிமாவை விடப்போவதில்லை. தெலுங்கில் தான் நடித்து வெற்றிப் பெற்ற படங்களை, தமிழுக்கு "டப்' செய்ய வைத்து, அதன்மூலம் தமிழில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே மேக்னாவின் திட்டம்.

* "குசேலன்' படத்தில், வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சோனா, தனது உடல் கவர்ச்சியைக் கொண்டு கதாநாயகிக்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால், பட அதிபர்களோ சோனாவின் மனசை கரைத்து, முழுநேர குத்தாட்ட நடிகையாக மாற்றிவிட்டனர். அதனால், மார்க் கெட்டில் உள்ள, சுஜா, தேஜாஸ்ரீ, ரகசியா உள்ளிட்ட நடிகைகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

* "அவன் அவள் அது' படம் மீண்டும் தனக்கு தமிழில் ரீஎன்ட்ரி தரும் என்று எதிர்பார்த்தார் சதா. ஆனால், மேற்படி படத்தில் சமீதா என்ற கவர்ச்சிப் புயலை களம் இறக்கிவிட்டு, சதாவை இருட்டடிப்பு செய்து விட்டனர். இதனால் கடுப்பாகிப் போன சதா, தனக்கு சிபாரிசு செய்த மாதவனிடம், "கா' விட்டு மும்பைக்கு பறந்து விட்டார். மேற்படி படத்தில் தனக்கே பணம் வரவில்லை, இவருக்கு எங்கு வாதாடுவது என்கிறார் மாதவன்.

* பழைய சிம்ரன் போல, உடல் கட்டை சிலிம்மாக வைத்திருக்கும் இலியானா, நட்சத்திர விருந்து, பார்ட்டிகளை சுத்தமாக தவிர்த்து வருகிறார். காரணம், ஆரம்ப காலத்தில் விருந்துகளில் புகுந்து விளையாடியதில், அவரின் தேக ஆரோக்கியம் கெட்டுப்போனது மட்டுமல்லாது, இடுப்பை சுற்றி சதை போட்டுவிட்டதாம். அதன் பிறகு தான் வாய் கட்டு போட்டு விட்டார் இலியானா.

* "திண்டுக்கல் சாரதி' படத்தில் ஹீரோவாக நடிக்கும் கருணாஸ், இனி படிப்படியாக காமெடியை குறைத்துக் கொண்டு, குணச்சித்திர வேடங்களில் பரிணமிக்கப் போகிறார். அதற்கு முன் உதாரணமாக, ஏற்கனவே தான் நடித்த, "நந்தா' உள்ளிட்ட சில படங்களையும் பட்டியலிட்டு, அதில், தான் உருக வைக்கும், "பெர்பாமன்ஸ்' வெளிப் படுத்தியதாகவும் சொல்கிறார் கருணாஸ்.

* "சக்கரகட்டி' நாயகி இஷிதா சர்மாவும், நாயகன் சாந்தனுவும் அடிக்கடி, "மீட்' செய்து, எதிர்கால சினிமா கனவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். விஷயம் அறிந்த அப்பா முருங்கைக்காய், "நீ சாதாரணமாக பழகுவாய், ஆனால் யாராவது பார்த்தால் கண்ணு, மூக்கு வைத்து காதல் கதை திரித்து விடுவர்' என்று மகன் சாந்தனு, இஷிதாவை சந்திக்க தடை உத்தரவு போட்டு விட்டார்.

* "தீ' படத்தில் ரஜினியுடன் நடித்த சுமன், அதன் பிறகு சிவாஜியில் தான் ரஜினியுடன் நடித்தார். மேலும், "சிவாஜி படபிடிப்பின் போது, பலமுறை தன்னுடனேயே ரஜினி உணவு உண்டு, நடிப்பைப் பற்றி தனக்கு அதிகமான "டிப்ஸ்'சை கொடுத்தார்' என்று, ரஜினியைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் சுமன். மீண்டும் சுமனுக்கு ரஜினி யுடன் நடிக்க அனேகமாக வாய்ப்பு கிடைக்கலாம்.

Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in