'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிறிஸ்டோபர் நோலனின் கடைசி பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ் வசூலை வாரிக் குவித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் 64 மில்லியன் டாலர்களை இந்த வார இறுதியில் குவித்துள்ளது. இதுவரை மொத்தம் 537.3 மில்லியன் டாலர்களை இந்தப் படம் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதால், வசூல் பாதிக்குமோ என முதலில் அச்சப்பட்ட படத்தின் வெளியீட்டாளர் வார்னர் நிறுவனம். ஆனால் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அன்றும் கூட, நல்ல வசூல் தொடர்ந்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், பேட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஐஸ் ஏஜ் 4-ம், மூன்றாவது இடத்தில் தி வாட்ச் படமும் உள்ளன. நான்காவது இடத்தில் ஸ்டெப் அப் ரெவால்யூஷனும், ஐந்தாவது இடத்தில் டெட் படமும் உள்ளன.