வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஷங்கர் இயக்கும், ஐ படத்தில் நான் நடிக்கவில்லை என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். நண்பன் படத்திற்கு ஷங்கர் இயக்கும் படம் ஐ. இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இவர்களுடன் மலையாளர் நடிகர் சுரேஷ் கோபி, சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் பாடலை விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஏ.வி.எம்மில் படமாக்கிவிட்டார் ஷங்கர். இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய ரோலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை தீபிகா மறுத்துள்ளார்.
இதுகுறித்து தீபிகா படுகோன் கூறியுள்ளதாவது, கூகுள் அலர்ட் மூலம் எனக்கு இந்த செய்தி தெரியவந்தது. இதுமுற்றிலும் தவறான செய்தி. ஷங்கர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பது வெறும் வதந்திதான். நான் அவரது ஐ படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.