சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மீண்டும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது . நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.குண்டாகவும் காட்சி அளித்தார். இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் வராது என பலரும் கணித்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தை டேனியல் சில்வா இயக்குகிறார். அவர்தான் ஐஸ்வர்யாவை அழைத்துள்ளார். இதில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்குகின்றனர். ஏற்கனவே 2004ல் பிரைட் அன்ட் பிரிஜுடிஸ் என்ற ஆங்கில படத்திலும் 2007ல் தலாஸ்ட் லிகெய்ன் என்ற ஆங்கில படத்திலும் நடித்தார். 2009ல் த பிங்க் பாந்தர் 2 என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.