அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
ஐஸ்வர்யா பாதியில் விலகிய ஹீரோயின் படத்தில் அவருக்கு பதில் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கரீனா கபூர். மதுர் பண்டர்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் புதியபடம் ஹீரோயின். நடிகையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஷூட்டிங்கும் நடந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா கர்ப்பமானதால் அவர் தொடர்ந்து அந்தபடத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து அவர் இடத்திற்கு கரீனா கபூர் நடிக்க புக் ஆனார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது. இதில் எதிர்பார்த்ததைபோல கரீனா கபூர் படுகவர்ச்சியாக தோன்றியுள்ளார். படத்தின் போஸ்டரில் படுகவர்ச்சியாகவும், அவரை சுற்றிலும் ஏராளமான பத்திரிக்கைகளும், மதுக்கோப்பைகளும் கிடக்கிறது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.