Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ரமேஷ் கண்ணாவின் ரசனையில் வண்ணம்!!

21 ஜூலை, 2012 - 16:12 IST
எழுத்தின் அளவு:

 வண்ணம் எண்ணம் பற்றி தங்கள் கருத்து...

களங்கமில்லாத வண்ணம் என்று எடுத்து கொண்டால் அது வெள்ளை தான்.  தூய்மைக்கும், தெளிவிற்கும் வெள்ளை வர்ணமே எடுத்துக்காட்டாக சொல்லுவார்கள்.. அதில் ஒரு சிறிய புள்ளி இருந்தாலும்.. மனிதர்களிடம் உள்ள குறைகள் போல் தெளிவாக தெரிந்து விடும். திரைபடத்தில் முதல் வண்ணப்படம் கேவா கலரில் எடுக்கப்பட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற தமிழ் படம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி நடித்தது. அந்த படம் பார்த்த அனுபவம் எனக்கு ஞாபகம் வருகிறது. ஆதம்பாக்கத்தில் ஜெயா டூரிங் கொட்டகை இருந்தது. அந்த சமயம் நான் ஆர்.எஸ்.மனோகர் அவர்களின் நாடக குழுவில்  நடித்து கொண்டிருந்தேன். அந்த முதல் கலர் படம் பார்க்க போன அன்று எங்களுக்கு ஒரு நாடகம் இருபதையே மறந்து எலெக்ட்ரிக் டிரையினை பிடித்து படம் பார்க்க பொய் டிக்கெட் இல்லாமல் ட்ரெயினில் இருந்து இறக்கி விடப்பட்டு, தண்டவாளம் வழியாகவே நடந்தே வந்து சேர்ந்தோம். அதெல்லாம் ஒரு காலம்.

@@@

உங்கள் இல்லத்திற்கு வண்ணம் எப்படி தேர்வு செய்வீர்கள்..

வீட்டிற்கு உள்ளே ஹால்ப் வைட் தன் எனக்கு பிடித்தது... நல்லா மனதிற்கு இதமாகவும் இருக்கும் நல்ல வெளிச்சமும் தரும். முன்பெல்லாம் நான் வெள்ளை சட்டை அணிந்துதான் போவேன். ஆனால் ஏறத்தாழ எல்லோருமே அப்படி இருப்பதால் என்னை அடையாளம் கண்டு சந்திப்போர் குறைவு. இதை மாற்ற வண்ண வண்ண சட்டைகள் அணிய ஆரம்பித்தேன்... பார்த்ததும் தெளிவாக நான் மட்டும் தனியாக தெரிவதால் இது போன்ற நிறத்தில் உடைகள் அணிகிறேன்.

@@@

நீல வானம் மற்றும் அதிகாலை சூரியனை பார்க்கும்போது...

நமது தேசிய கொடியை நீங்கள் பார்த்தீர்கள் என்றல் ஆரஞ்சு வண்ணம் ஹிந்துக்களுக்காகவும், வெள்ளை நிறம் கிருஸ்துவர்களையும் பச்சை நிறம் முஸ்லிம் சமுதாயத்தையும் குறிக்கும் வண்ணம் உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நிறம் என்று ஆரஞ்சு நிறத்தை சொல்லலாம். வானத்தில் நிறத்தை சமுத்திரம்  பிரதிபளிக்கரதால் அனைத்தும் நீல நிறமாகி விடுகிறது.

@@@

கருப்பு நிறத்தை பற்றி..

சனீஸ்வர கடவுளையும், துக்கமாகவும், அபசகுன நிறமாகவும் அதை சொல்வார்கள். அனால் உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிடித்தமான நிறமே கருப்பு தான். "நானும் ஒரு பெண்" என்ற படத்தில் சுசீலா பாடிய "கண்ணா கருமை நிற கண்ணா..." என்ற பாடல் யாரவது மறக்க முடியுமா. என்னுடைய பெயரிலும் கண்ணா இருப்பதால் கருப்பு என்றாலே ஒரு தனி மரியாதை உண்டு. சேரன் டைரக்ட் செய்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு நிறத்தை வைத்து ஒரு பாடு உண்டு. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...

@@@

வானவில் பற்றி தங்கள் கருத்து.. .

மழை வருவதற்கு முன் வரும் அந்த வானவில் என்றாலே எனக்கு ஞாபகம் வருவது அவளுகென்று ஒரு மனம் திரைப்படம்தான்.. ஸ்ரீதர் இயக்கத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற பாடலில் வரும் ஒரு காட்சி தத்ரூபமாக ஒரு வானவில் தோன்றும்.. வானவில் என்றதும் அதுதான் இன்னும் எனக்கு ஞாபகம்.

@@@


நீங்கள் ஒரு நாடக நடிகர்/இயக்குனர்/ நடிகர்/ என்று பல வண்ணங்களில் உங்களுக்கு பிடித்தது பற்றி..

நாடகம் நடித்து, இயக்கி நானே நடித்து நொந்து போன ஒரு வண்ணம் மிகவும் பிடித்த வண்ணமும் அது.. அசோசியேட் டைரக்டர் மற்றும் அஸ்சிடன்ட் டைரக்டர் ஆக டைரக்டர் ஆகவே உருவான வண்ணம் ஒன்று உண்டு. விக்ரம் சார் உதவியுடன் நடிகராக உலா வரும் வண்ணம் ஒன்று.  எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் முதலில் நான் நாடகத்தில் எடுத்துக்கொண்ட வண்ணம்  அடிப்படை. அந்த வண்ணம் வாழ்க்கையின் அடிப்படை வண்ணம் அதுவே.

@@@

தொடரும் என்ற படத்தை இயக்கிநீர்கள்.. அதன் பிறகு...

நிறைய  முயற்சிகள்  எடுத்து .. நின்று  போய்.. வெளிவராமல் போனதால்.. தொடரும் படத்திற்கு பிறகு முடிவு செய்தேன் இனிமேல் நாம் டைரக்ட்  செய்வதில்லை என்றும், நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றும்.. ஒரு பத்திரிகைக்கு நான் அளித்த பதிலில் ப்ரோடுசெர்ஸ் முன் வந்தால் நான் ஏன் டைரக்ஷனில் பின் வாங்குவேன் என கூறி இருந்தேன். சில வருடங்கள் கழித்து யூத் ஹீரோ அஜித் கூப்பிட்டு டைரக்ட் செய்ய சொன்னார் அது தன் தொடராமல் போன தொடரும் படம். அதன் பிறகு நிறைய படங்களுக்கு வசனங்கள், கோ டைரக்ஷன் என பல வண்ணங்கள் எடுக்கிறேன். உலகில் முதன் முதலாக 3D  அனிமேஷன் படங்கள் செய்ய இருக்கிறேன்.

@@@

ஆர் பாண்டியராஜன், விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் இவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வண்ணம்?

ஆர் பண்டியராஜன் உடன் நான் பட்ட பாடுகள் சொல்ல முடியாதது.. அவர் எனக்கு உதவ.. நான் அவருக்கு உதவ.. படங்கள் நின்று போக.. புதிய படங்களுக்கு பூஜை போட என ஆறு-ஏழு வருடங்கள் பாடாய் பட்டோம் என்றாலும்.. ஒரு நல்ல நண்பர். அவருக்கு நான் கொடுக்கும் வண்ணம் வெள்ளை. விக்ரமன் என்கிற ஒரு டைரக்டர் நண்பருக்கு நான் கொடுக்கும் வண்ணம் நீலம்.  அவர் எனக்கு வானத்தை போல.. எல்லை இல்லாத உதவிகள் செய்து என்னுடைய  வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது டைரக்டர் விக்ரமன் சார் தான்.  டைரக்டர் கே எஸ் ரவிக்குமார் என்ற ஒரு நண்பருக்கு அறிமுகமான பிறகு, நீங்கள் அறிமுக படுத்தி நடிகர் விக்ரம் ஆனால் அவர் நடித்த முதல் படம் பெட்டியில் தூங்குகிறது.. சினிமாவில் எதுவுமே சொல்ல முடியாத புதிர்.  அதன் பிறகு நானும் ரவிக்குமாரும் இனைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளோம் என்னுடைய வாழ்வில் வசந்தம் வீச செய்து அதற்கு கிரீன் சிக்னல் தந்த டைரக்டர் ரவிக்குமாருக்கு எனது வண்ணம் பச்சை.

@@@ @@@ @@@

உங்களது கலை ஆர்வத்தையும் அதை உங்கள் பெற்றோர் ஏற்றுகொண்ட விதம்...

எனக்கு என்னுடைய சொந்த அனுபவத்தில் எங்கு பிடித்த வண்ணம் என்றால் அது கோல்ட். கோல்டன் கலரில் தன் கார் மற்றும் அனைத்து பொருட்களையும் தேர்ந்தெடுக்கிறேன். பள்ளிக்கூடதில் படிக்கும் காலம் தான் எல்லோருக்கும் பொற்காலம். எனக்கு பள்ளி படிப்புடன் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது என்னுடைய ஐந்தாவது வகுப்பு படிக்கும்போதே.. அதற்கு என்னுடைய அம்மா தான் முக்கிய காரணம் என சொல்லுவேன்.  கேரளாவில் பிறந்து சினிமாவில் நடிக்க ஆசை பட்டு சென்னை வந்து சேர்ந்ததினால் என்னுடைய அம்மாவிற்கும் கலை ஆர்வம் எப்போதுமே உண்டு.. நாடகங்களுக்கு செட் டிசைன் செய்து வந்த போது ஆர் எஸ் மனோஹரிடம் அறிமுகம் ஏற்பட்டு நானும் சிறு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு சமயம் என் அம்மா வைத்திருந்த டிசைன் செட் அந்த காலத்திலேயே லட்ச ருபாய் மதிபுள்ளதெல்லாம் தீ விபத்தில் கருகி சாம்பலான சம்பவம் என் அம்மாவை மிகவும் பாதித்தது.. சில காலங்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டார்..இறந்த போது நன் ஒரு நாடகத்தில் நடித்து கொண்டிருந்தேன் விஷயம் தெரியாமலேயே.. வீடு வந்து பார்த்த போது தன் விஷயம் தெரிந்தது..என் அம்மாவின் ஆசை நான் பெரிய நடிகனாக வரவேண்டும் என்பது.. அதை நிறைவேற்றி விட்டேன்.. ஆனால் அதை பார்கத்தான் என் அம்மா இப்போது இல்லை.

@@@

மிகப்பெரிய விருதாக நினைப்பது..

படையப்பா பட ஷூட்டிங்.. சிவாஜி கணேசன் சார் அவர்களை காலை 6.30 மணிக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும்.  நான் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே போய்விட்டேன். ஆனால் அதற்கு முன்னரே அவர் தயாராகி வாசலில் காத்திருந்தார்.  வண்டியை நேராக விடும்படி டிரைவரிடம் கூறி, நீயே தனியாக போய் கூட்டி கொண்டு வந்து விடு என சொல்லி விட்டு நேராக ஷூட்டிங் ஸ்போட்க்கு நான் போய் விட்டேன்.. அங்கே தேவகோட்டை அருகில் உள்ள ஒரு அரண்மனையில் தான் ஷூட்டிங்.  சிவாஜி சார் முன்னரே படி ஏறி போய் கொண்டிருந்தார். நானும் பின்னாலே போய் கொண்டிருந்தேன்.. அனால் நான் நடித்த படங்களில் இருந்து சிலவற்றை குறிப்பிட்டு அவரே எனக்கு பாராட்டு வழங்கி, அங்குள்ள அனைவரிடமும் என்னுடைய நடிப்பை பற்றி சொன்னார்.. அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆகும். ஆஸ்கார் விருதை விட இதுவே நான் மிகவும் பெருமையாக நினைக்கிறன்.

@@@ @@@ @ @@

வண்ணம் என்ற இந்த நிகழ்ச்சியல் என்னை இதுவரை பார்த்து ரசித்த தினமலர் ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி வணக்கம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! இந்தியாவில் தேர்தல் திருவிழா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in