ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
யு-டியூப் சாதனை வரலாற்றில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடுவது இந்தியத் திரைப்படங்கள் மட்டும் தான். இந்திய அளவில் ஹிந்திப் படங்களுக்கும் போட்டியாக தமிழ்ப் படங்களின் வீடியோக்கள் இருக்கின்றன.
ஷாரூக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரோகித் ஷெட்டி, இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அலிகான், சோனு சூட் மற்றும் பலர் நடிக்கும் 'சிம்பா' படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆன்க் மேரே' பாடல் யு டியுபில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. மிக விரைவில் 10 கோடி பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனை தான் அது.
இந்த 'ஆன்க் மேரே' பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 'தேரே மேரே சப்னே' படத்தில் இடம் பெற்ற 'ஆன்க் மேரே' பாடலைத்தான் தற்போது 'சிம்பா' பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ஜீரோ' படத்தின் பாடலைக் காட்டிலும் 'சிம்பா' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.