ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரப் பெண்மணி ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மணிகர்ணிகா - தி குயின் ஆப் ஜான்சி என்ற ஹிந்திப் படம். ஜான்சி ராணியாக தேசிய விருது பெற்ற கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அவருடன் அதுல் குல்கர்னி, சுரேஷ் ஓபராய், ரிச்சர்ட் கீப் உள்ளட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார்.
படம் வருகிற ஜனவரி மாதம் 25ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படம் சம்பள பாக்கி பிரச்சினையில் சிக்கி உள்ளது. மணிகர்னிகா படத்தில் பணியாற்றிய துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சுமார் 2 கோடி சம்பளபாக்கி இருப்பதாகவும், அதை செட்டில் செய்த பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்றும் பாலிவுட் திரைப்பட தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் கடைசி நேரத்தில் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.