ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை நபீஸா அலி. மேஜர் சாப், யம்லா பக்லா தீவானா, பிக்பாஸ், ஜூனுன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர், அந்த மாநில படங்களிலும் நடித்துள்ளார். நடிகை மட்டுமில்லாமல் சிறந்த எழுத்தாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணியும் ஆற்றி வருகிறார். கணவர் ஆர்.எல்.ஜோதி, பிரபல போலோ விளையாட்டு வீரர். இவர்களுக்கு அஜீத் ஜோதி என்ற மகன் உள்ளார்.
61 வயதாகும் நபீஸா அலிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தனக்கு புற்று நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பதை நபீஸா அலி தெரிவித்துள்ளார். இதனால் பாலிவுட் திரையுலகமும், டில்லி அரசியல் ஏரியாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்கெனவே நடிகை மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் இர்பான்கானும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நபீஸா அலிக்கும் புற்று நோய் தாக்குதல் வந்திருக்கிறது.