சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ஹிந்தியில் வெளியான, டிக்டேட்டர், 3ஜி போன்ற படங்களில் நடித்தவர், சோனல் சவுகான். தமிழில், இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்தார்.
தற்போது, இவரது கைவசம், படங்கள் எதுவும் இல்லை. இதனால், தன்னுடைய விதம் விதமாக புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பொழுதை கழிக்கிறார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர், 'உங்களை பார்க்கும்போது, பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை மதுபாலா போலவே இருக்கிறது. முதலில், உங்கள் அம்மாவிடம் சொல்லி, சுற்றிப் போடச் சொல்லுங்கள்;திருஷ்டி படப் போகிறது' என, கருத்துகளை பதிவிட்டனர்.
இதை படித்ததும், சோனலுக்கு, மகிழ்ச்சி, தலைகால் புரியவில்லை. 'நான் மதுபாலா போல இருக்கிறேனா... என்னால் நம்பவே முடியவில்லை. காற்றில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது' என, தோழிகளிடம், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.