'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பாலிவுட்டின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் ஹேமமாலினி. தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாத ஹேமமாலினி, ஹிந்திக்குச் சென்று நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். அவருடைய 70வது பிறந்த நாளை நேற்று திரையுலக நண்பர்களுடன் கொண்டாடினார். அந்தப் பிறந்த நாளில் ரேகா, ஜிதேந்திரா, சஞ்சய் கான், சரின் கான், இஷா தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையான ஹேமமாலினி, 1961ம் ஆண்டில் வெளிவந்த 'இது சத்தியம்' என்ற படத்தில் அறிமுகமானார். அதோடு பல ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டில் வெளிவந்த 'ஹேராம்' படத்தில் நடித்தார். அவருடைய மகளான இஷா தியோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார்.
ஹேமமாலினி தமிழில் நடிக்கவில்லை என்றாலும், அவர் நடித்த பல ஹிந்திப் படங்களை அந்தக் கால தமிழ் ரசிகர்கள் கொண்டாடி ரசித்தார்கள். நேற்றும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததை பார்க்க முடிந்தது.