'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீ -டூ இயக்கம் மூலம் ஆண்கள் மீது பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் யாவும் உண்மை அல்ல என்று நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான் தெரிவித்துள்ளார். தமது புதிய கடையை திறந்து வைத்து பேசும்போது இந்த மீ டூ இயக்கத்தில் நிறைய பொய்யான புகார்களும் எழுப்பப்படுவதாக தெரிவித்தார்.
சட்டரீதியாக செல்லத்தக்க வலுவான ஆதாரம் இல்லாமல் யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். ஹிருத்திக் ரோசன் மீதும் நடிகை கங்கணா ரனாவத் பாலியல் புகார்களை கூறியிருந்தார். படப்பிடிப்பின்போது இளம் பெண்களை தகாத முறையில் ஹிருத்திக் ரோசன் நடத்தியதாக கங்கணா புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அதனை ஹிருத்திக் ரோசன் மறுத்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு மன வேற்றுமைகள் காரணமாக தமது மனைவி சூசனை ஹிருத்திக் ரோசன் விவாகரத்து செய்துள்ளார்.