ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கும் 'மணிகர்னிகா - தி குயின் ஆப் ஜான்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் டீசர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. 1 கோடியே 84 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தின் இயக்குனரான கிரிஷ், தெலுங்கில் 'என்டிஆர்' படத்தை இயக்க வந்துவிட்டதால் கங்கனாவே 'மணிகர்னிகா' படத்தின் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடித்தார். 'பாகுபலி' படங்களுக்குக் கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் 'மணிகர்னிகா' படத்தின் கதையை எழுதியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.