ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் கடந்த வியாழனன்று பஹத் பாசில் நடித்த வரதன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. பிரபல இயக்குனர் அமல் நீரத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அதேசமயம் அடிப்படையில் ஒளிப்பதிவாளராக இவர் பஹத் பாசில் நடித்துவரும் ட்ரான்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்தபோது, பஹத் பாசிலும் அமல் நீறத்தும் அதை கால்ஷீட் குளறுபடி இல்லாமல் அழகாக சமாளித்து விட்டார்களாம். உஸ்தாத் ஹோட்டல் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு சுமார் ஐந்து ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கிவரும் படம் தான் 'ட்ரான்ஸ்.
இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க, நஸ்ரியாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை 2019ல் மார்ச்-22ஆம் தேதி வெளியிடப்போவதாக இப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.