பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஷங்கரின் இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் '2.0' படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
யு டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய டீசர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் டீசருக்குத்தான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதை விட இரண்டு மடங்கு வரவேற்பு ஹிந்தி டீசருக்குக் கிடைத்து வருகிறது. அக்சய் குமாரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார்கள் என்பது இப்போது பலருக்குப் புரிந்திருக்கும்.
படம் வெளிவந்த பின் தமிழ்ப் படத்தை விட ஹிந்தி வசூல் அதிகம் இருந்தால் ரஜினிகாந்தை விட அக்சய் குமார் தான் கொண்டாடப்படுவார். இத்தனைக்கும் ஹிந்தி டீசரில் 1.08 நிமிடங்களில் ஒரு வினாடிக்கும் குறைவாகத்தான் அக்சய் குமார் இடம் பெற்றுள்ளார்.
அதற்கே ஹிந்தி டீசருக்கான மொத்த பார்வை 3 கோடியைக் நெருங்குகிறது என்றால் அவர் ரஜினிகாந்த் அளவிற்கு அதிக வினாடிகள் இடம் பெற்றிருந்தால் டீசருக்கான பார்வை எங்கோ சென்றிருக்கும் போலிருக்கிறதே...!!.