மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் திலீப் குமார் 95. இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், மனைவி சாயிரா பானுவுடன் வசித்து வருகிறார். வயோதிகம் காரணமாக, திலீப் குமாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, மும்பை லீலாவதி மருத்துவமனையில், நேற்று அவர் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.