Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விடுதிகள், வீடுகளில் தங்கி நடித்த அனுஷ்கா சர்மா

04 செப், 2018 - 13:34 IST
எழுத்தின் அளவு:
விடுதிகள்,-வீடுகளில்-தங்கி-நடித்த-அனுஷ்கா-சர்மா

அனுஷ்கா சர்மா, வருண் தவான் நடித்துள்ள படம் சுய் தாகா. இது ஏழை நெசவாளர்கள் பற்றிய கதை. தேசிய விருது பெற்ற இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். இந்தப் படம் கைத்தறி துணிகளையும், நெசவாளர்களையும் காப்பாற்றும் நோக்கத்திலும் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கதிலும் உருவாகி உள்ளது.

இதன் படப்பிடிப்புகள் வட இந்தியாவில் நெசவாளர்கள் அதிகம் வாழும் குக் கிராமங்களில் நடந்தது. அங்கு முன்னணி நட்சத்திரங்கள் தங்கும் அளவிற்கான ஓட்டல்கள் கிடையாது. இதனால் சாதாரண மக்கள் வசிக்கும் வீடுகளிலேயே தங்கி அனுஷ்கா சர்மாவும், வருண் தவானும் நடித்துக் கொடுத்துள்ளனர்.


"சுய் தாகா படப்பிடிப்பின்போது எளிய மனிதர்களின் வீடுகளில் தங்கி இருந்தேன். அவர்களின் அன்பு, அவர்கள் அளித்த எளிமையான, சுவையான உணவு வாழ்நாளில் மறக்க முடியாதது. இனி அப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அங்கு தங்கிய பிறகு எளிய வாழ்க்கையின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. எளிய ஆடைகள் அணியவும் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் அனுஷ்கா சர்மா.


Advertisement
ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ... திலீப் குமார் மருத்துவமனையில் கவலைக்கிடம் திலீப் குமார் மருத்துவமனையில் ...


வாசகர் கருத்து (1)

INNER VOICE - MUMBAI,இந்தியா
04 செப், 2018 - 17:10 Report Abuse
INNER VOICE இந்த படம் தமிழில் ப்ரியதர்சனின் 'காஞ்சிபுரம்" வந்தாயிட்டே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in