Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.100 கோடிக்கு தடுமாறும் 'தடக்'

07 ஆக, 2018 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Did-Dhadak-will-enter-in-Rs.100-crore-club?

2016-ம் ஆண்டு சுமார் 4 கோடி ரூபாய் செலவில் தயாராகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த மராத்தி திரைப்படம் 'தடக்'. இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த படம். ஆனாலும், அந்தப் படத்தில் 2004ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான 'காதல்' படத்தின் சாயல் நிறையவே இருந்தது என்ற விமர்சனமும் இருந்தது.

மராத்தியில் சாதனை புரிந்த 'சாய்ராட்' படத்தை ஹிந்தியில் 'தடக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஜுலை 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஞாயிறு முடிய சுமார் 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் இந்தப் படம் ஓடினாலும் 100 கோடியைக் கடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஒரிஜனல் 'சாய்ராட்' செய்த வசூல் சாதனையைக் கூட 'தடக்' ஏன் செய்யவில்லை என்பது குறித்து பாலிவுட்டில் தற்போது அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இருப்பினும் 'தடக்' படம் நஷ்டமடையாமல் தப்பித்தது பலருக்கு ஆறுதல்.

Advertisement
கைத்தறி பிரச்சாரம் தொடங்கும் வருண், அனுஷ்காகைத்தறி பிரச்சாரம் தொடங்கும் வருண், ... கருணாநிதி கையால் முதல் தேசிய விருது : அமிதாப் இரங்கல் கருணாநிதி கையால் முதல் தேசிய விருது : ...


வாசகர் கருத்து (1)

srk srinivasan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஆக, 2018 - 03:43 Report Abuse
srk srinivasan மராத்தி படமான "sairat , ஒரு உண்மையான கிராமிய வாடையும், பணம் , அரசியல் பின்னணி மற்றும் ஜாதிய வெறி கொண்ட பெண்ணின் குடும்பம், மீனவ குடும்பத்தில் பிறந்த கதாநாயகன் என்று அசல் கதையைகண் முன்னால் நிறுத்தியதே அதன் வெற்றிக்கு கரணம். அந்த படத்தை ஐந்து முறை பார்த்துவிட்டேன். ஒரு இடத்தில கூட இயக்குனர் சினிமாவாக காண்பிக்கவில்லை, உணமையினை அப்படியே முகத்தில் அடித்தாற்போல் காண்பித்திருந்தார். மேலும் கிளைமாக்ஸ் காட்சியினை ஹிந்தி படத்தில் மாற்றிவிட்டார்கள். அதுவும் ஒரு காரணம். மேலும் மராத்தி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்படத்தின் கதாநாயகி. படப்பிடிப்பின்போது அவர் ஒன்பதாவது தான் படித்துக்கொண்டிருந்தார்.அவருடைய நடிப்பும் முகபாவனை ஒப்பிடும்போது ஸ்ரீதேவியின் வாரிசு ஒரு மைல் தள்ளியே நிற்கமுடியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in