பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். ஆமாம்.. அவர் பாலிவுட்டில் முதன்முதலாக நடித்துள்ள 'கர்வான்' என்கிற படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகாஷ் குரானா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக மிதிலா பார்க்கர் என்பவர் நடிக்க, ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி கர்பந்தா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.. நேற்று முன் தினம் இந்தப்படத்தின் பிரிவியூ காட்சி திரையிடப்பட்டது. படத்தை பாத்த அனைவரும் துல்கரின் நடிப்பை பாராட்டியதோடு, வரும் நாட்களில் பாலிவுட்டில் துல்கர் ஒரு முக்கியமான இடத்தை பிடிப்பார் என்றும் பாராட்டியுள்ளார். .