விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சர்வதேச அளவில் பிரபலமாகி விட்ட உற்சாகத்தில் உலா வருகிறார், தீபிகா படுகோனே. உலகில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் மெழுகுச் சிலைகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவது வழக்கம். இந்த அருங்காட்சியகத்தில், தங்களுக்கு சிலை வைக்கப்படுவதை, பிரபலங்கள் கவுரவமாக கருதுவர்.
தற்போது, தீபிகாவுக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. லண்டன் அருங்காட்சியகத்தில் தீபிகாவுக்கு மெழுகுச் சிலை வைப்பதற்காக, அருங்காட்சியக நிர்வாகிகள், அவருக்கு அளவெடுத்துச் சென்றனர். மெழுகுச் சிலைக்கு போஸ் கொடுப்பதற்காக, வெள்ளைச் சட்டையும், கறுப்பு நிற லெதர் பேன்ட்டும் அணிந்திருந்தார், தீபிகா. கோல்டு கலரில், தோடு, பிரேஸ்லெட், வாட்ச் ஆகியவற்றையும் அணிந்திருந்தார். தீபிகா அணிந்திருந்த லெதர் பேன்ட்டின் விலை, 1.68 லட்சம் ரூபாயாம்.