'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வாரம் பாலிவுட்டில் சஞ்சு என்கிற படம் வெளியானது. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஞ்சய் தத் ஆக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்திருக்கிறார்.
படம் நன்றாக இருப்பதாக பாராட்டு பெற்றாலும், வசூலை அள்ளி குவித்தாலும், சஞ்சய் தத்தின் உண்மையான முகத்தை இந்தப்படத்தில் உள்ளது உள்ளவாறு காட்டவில்லை என்கிற கருத்தையே பலரும் கூறி வருகின்றனர்.
குறிப்பாக சஞ்சய் தத்தின் இமேஜை காப்பாற்ற வேண்டும் என்கிற கண்ணோட்டத்திலேயே ராஜ்குமார் ஹிரானி படத்தை இயக்கியுள்ளார் என்கிறார்கள். சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் கருத்தும் கூட இதே தான். அதனால் சஞ்சய தத்தின் உண்மைக்கதையை படமாக்கும் வேலைகளில் இறங்கிவிட்டராம் வர்மா.
சஞ்சு ; தி ரியல் ஸ்டோரி என தற்காலிகமாக டைட்டிலும் வைத்து இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்ட வர்மா, 1993-ல் மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கில் சஞ்சய் தத்திற்கான தொடர்பு பற்றி இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்தித்து ஆதாரப்பூர்வன தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளாராம்.