'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
பிரபல பாலிவுட் நடிகை ரிதா பாதுரி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62.
ராஜா, ஜூலி, தில் வில் பியார் வியார் உட்பட 70க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாகவும், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து புகழ் பெற்றவர் ரிதா பாதுரி. கமல், மலையாளத்தில் நடித்த கன்னியாகுமரி படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்த பின்னர் டிவி சிரீயல்களில் நடித்து வந்தார் ரிதா பாதுரி.
சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 17) காலை மரணம் அடைந்தார். அவரது உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் அவரது இறுதிச்சடங்கு நடந்தது.