ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் யு டியூபில் வெளியிடப்பட்டால் அவர்களுடைய ரசிகர்கள் அவை புரியும் சாதனையைக் கொண்டாடி மகிழ்வார்கள். அதிலும் குறிப்பாக, விஜய், அஜித் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையில்தான் அந்த போட்டி அதிகமிருக்கும்.
ஒருவர் சாதனையை மற்றவர் முறியடிப்பது பற்றி அவர்களது ரசிகர்கள் பொறாமை கலந்த போட்டியுடன் கமெண்ட்டுகளை அள்ளித் தெளிப்பார்கள். அந்த சாதனைகள் எல்லாம் ஒரு சாதனையா என தற்போது எண்ணத் தோன்றுகிறது.
ரஜினி, விஜய், அஜித் ஆகியோரது படங்கள் செய்த சாதனைகளை விட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகும் 'தடக்' படத்தின் டிரைலர் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் ஒரு மாதத்திற்கு முன்பு யு டியூபில் வெளியானது.
தற்போது 4 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்று வியக்க வைத்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் அவ்வளவு பார்வைகளா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
'தடக்' டிரைலரின் இத்தகைய வரவேற்புக்குக் காரணமே ஜான்வி தான் என்பது குறிப்பிடத்தக்கது.