டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்களையே தன் படங்களால் ஆட்டம் காண வைத்தவர் கவர்ச்சி நடிகை ஷகிலா. அவர் நடித்து வெளிவரும் மலையாளப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஷகிலாவுக்கு எதிராகத் திரண்டு அவரை மலையாளத்தில் நடிக்க முடியாமல் செய்த வரலாறும் உண்டு. அவரது பல ஆபாசப் படங்கள் தமிழ்நாடு தவிர தென்னிந்தியாவிலும் வெளியாகி வசூலை அள்ளியதுண்டு.
மலையாளத்தில் நடிக்க முடியாமல் போன பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நகைச்சுவை நடிகையாக சில படங்களில் நடித்தார். இப்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள். ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்க உள்ளார். ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சந்தா நடிக்கப் போகிறார்.
ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்க 'காலா' நாயகி ஹுமா குரேஷி, ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சந்தா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்தது. கடைசியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சா தேர்வாகியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தின் சில காட்சிகள் மலையாளத்திலும் படமாக உள்ளதாம். அப்படியே கண்டிப்பாக தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டுவிடுவார்கள். ஷகிலா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.