சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சன்னி லியோன் என்றால் ஆபாச பட நடிகையாகத்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெளிச்சத்துக்கு வராத சன்னிலியோனின் இன்னொரு பக்கத்தை சொல்லும் விதமாக அவரது வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக தற்போது தயாராகியுள்ளது. கரண்ஜித் கவுர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சீரிஸின் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
2 நிமிடம் 24 விநாடிகள் ஓடும் இந்த டிரைலரில் சன்னி லியோன் மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். கரண்ஜித் கவுர் எப்படி ஆபாச நடிகையாக மாறினார், பாலிவுட்டில் நுழைந்தது எப்படி, அவரின் இளமைகாலம் போன்றவை இந்த சீரிஸில் பேசப்பட இருக்கிறது.
"நீங்கள் சன்னி லியோனை பார்த்துள்ளீர்கள், இது கரண்ஜித் கவுரை சந்திப்பதற்கான நேரம் என டுவீட் செய்துள்ளார்.
ஜீ 5 ஒரிஜினல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த கரண்ஜித் கவுர், வருகிற ஜூலை 16-ம் தேதி முதல் வெளியாக உள்ளது.