தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள துல்கர் சல்மான் , 'கர்வான்' என்கிற படத்தில் நடித்துள்ளார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். .. ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி கர்பந்தா துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகியாக மிதிலா பார்க்கர் நடித்திருக்கிறார்.
இந்தப்படம் துல்கருக்கு முதல் பாலிவுட் படம் என்றாலும் அதற்காக முன்கூட்டியே ரிகர்சல் எதுவும் பார்க்க இயக்குனர் விரும்பவில்லையாம். காரணம் படத்தின் கதைப்படி கதாநாயகி அப்போது தான் வெளி உலகத்தை குறிப்பாக வெளி ஆண்களையே சந்திக்கிறாராம். அதனால் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகப்படுத்தாமல் இந்த நடிகர்கள் நடித்தால் தான் காட்சி சிறப்பாக வரும் என கருதியதால் தான் ரிகர்சல் வேண்டாம் என கூறிவிட்டாராம் இயக்குனர். இந்தப்படம் ஆக-3ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.