'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
முன்பெல்லாம் இறந்து போனவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியது போய், தற்போது உயிருடன் இருப்பவர்களின் வாழ்க்கை வரலாறையே படமாக எடுக்கும் ட்ரெண்டிங் உருவாகிவிட்டது. அந்தவகையில் தற்போது ரன்பீர் கபூரை வைத்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படமாக இயக்கியுள்ளார் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.
சோனம் கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தை எடுத்து முடித்து மொத்தப் படத்தையும் எடிட் செய்தபோது மொத்தம் 2 மணி 45 நிமிடம் ஓடும் அளவுக்கு இருந்ததாம். ஆனால் படம் நீளமாக இருப்பதாக கருதிய ராஜ்குமார் ஹிரானி, இதில் தான் ரசித்து ரசித்து எடுத்த ஒரு பாடலை வெட்டி எறிந்துவிட்டாராம்.
"மனதிற்கு நெருக்கமான பாடல் தான்.. என்ன செய்வது கதை சொல்லும் வேகத்தை அது தடுப்பதாக தெரிந்ததால் வெட்டிவிட்டோம்" என்கிறார் ராஜ்குமார் ஹிரானி.