‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது, ஹிந்தியில் உருவாகியுள்ள தடக் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார்.
இந்தநிலையில், தன்னை மிகவும் கவர்ந்த நடிகைகளாக, மதுபாலா, வகீதா ரஹ்மான், மீனாகுமாரி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டுள்ள ஜான்வி கபூர், டைட்டானிக் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு படம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படி பல நடிகைகள் தன்னை கவர்ந்தவர்களாக கூறியுள்ள ஜான்வி கபூர், இந்திய அளவில் பிரபல நடிகையான தனது அம்மாவை அந்த பட்டியலில் சேர்க்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.