ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகை விருது கிடைத்துள்ளது. இதேபோல நடிகர் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட்டில் மோசமான ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது கோல்டன் கேலா விருது. சமீபத்தில் 4வது கோல்டன் கேலா விருது பெறும் நட்சத்திரப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, நடிகர் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை என்பதைக் காட்டிலும் ஐட்டம் டான்சர் என்று பெயர் வாங்கியுள்ள தீபிகா படுகோனேவுக்கு மோசமான நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஷாருக் கானின் கடும் உழைப்பில் வெளிவந்த ரா ஒன் மோசமான படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. மோசமான இயக்குனர் விருது ரா ஒன் படத்தை இயக்கியதற்காக அனுபவ் சின்ஹாவுக்கு கிடைத்துள்ளது.