ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
மேக்னா குல்சார் இயக்கத்தில் சங்கர் இஷான் லாய் இசையமைப்பில் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் பலர் நடித்து மே மாதம் 11ம் தேதி வெளிவந்த படம் 'ராஸி'. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது.
ஆலியா பட் நடித்து வெளிவந்த படங்களில் இதற்கு முன் '2 ஸ்டேட்ஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா' ஆகிய படங்கள் இதற்கு முன் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளன.
ஐபிஎல்., விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கம் சீசனில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பது பெரிய விஷயம் என்று சொல்லப்படுகிறது. 2018ம் ஆண்டில் 'பத்மாவத், சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி, பாகி 2, ரெய்ட்' ஆகிய படங்களுக்குப் பிறகு 100 கோடி கிளப்பில் 'ராஸி' இணைந்துள்ளது.
ஹரிந்தர் சிக்கா எழுதிய 'செமத்' என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. 1971ம் ஆண்டு ஒரு இந்திய பெண் உளவாளி, பாகிஸ்தான் மிலிட்டரி அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டதனால் நடந்த சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.