'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ |
பாலிவுட்டில் ஸ்டைல் ஹீரோ என்று அழைக்கப்படுகிறவர் மிதுன் சக்ரவர்த்தி. அவர் நடித்த டிஸ்கோ டான்சர் படம், ஷோலே படத்துக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் ஓடிய படம். ஹிந்தி மற்றும் இந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி, மணிரத்னம் இயக்கிய ஹிந்தி படங்களின் தமிழ் வெர்சன் மூலம் தமிழுக்கும் அறிமுகம். கடைசியாக யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
70 வயதாகும் மிதுன், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.