ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திலும் கமலுடன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், விஸ்வரூபம்-2படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதையடுத்து தற்போது இந்தி பதிப்பை பார்த்த சென்சார்போர்டு, படத்தில் மதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதாக சொல்லி 17 காட்சிகளில் கத்தரித்துள்ளார்களாம். அப்படி 17 வெட்டு கொடுத்த பிறகும் யுஏ சான்றிதழ்தான் கொடுப்பதாக கூறியிருக்கிறார்களாம். இதுகுறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.