கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பாலிவுட்டில் பிரபலமானவர் மேக்கப்மேன் ஷான் முட்டத்தில். கேரளாவை சேர்ந்தவரான இவர் தான் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் ஆஸ்தான மேக்கப் மேன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரே எதிர்பார்க்காத வண்ணம் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து ஷானை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜாக்குலின்.
ஆம்.. ஷானின் பிறந்தநாளன்று அவரை அவரது அபர்த்மென்ட் மாடியில் இருந்து வரவழைத்த ஜாக்குலின் அவர் கீழே வந்ததும் எஸ்யுவி கம்பஸ் வகையை சேர்ந்த ஜீப் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த எதிர்பாராத பரிசால் அசந்துபோன ஷான், இதுவரையிலான என் பிறந்தநாட்களில் இது மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது என நெகிழ்ந்துள்ளார்.