தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவிற்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் வினோத் கண்ணா, 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த "மான் கா மீட்" என்ற படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து "மேரி அப்னே, மேரே கான், மேரே தேஷ், கேத்தார், ஜெயில் யாத்ரா, அமர் அக்பர் ஆன்டனி, ராஜ்புட் குர்பானி, ஜூரம்" உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
அஜானுபாகுவான உடல் தோற்றமும், அவரது அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஷாரூக்கானின் தில்வாலே படத்தில் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாகவும் இருந்த வினோத் கண்ணா, புற்றுநோயால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார்.
சினிமாவில் இவரது கலைச் சேவையை பாராட்டி, மத்திய அரசு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.