டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபுதேவா நடிப்பில் 'மெர்க்குரி' படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பாராஜ் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிக்கும் படத்துக்கும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்துக்கும் முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு இப்படத்தை தொடங்க இருக்கின்றனர். இந்தப் படத்தில், வில்லனாக நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்று நவாஸுதீனிடம் கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.
அதேசமயம் நவாசுதீன் சித்திக் தரப்பு, ரஜினி படத்தில் நடிப்பதை இன்னும் உறுதி செய்யவில்லை, அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறது.