இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் வெளியான மராட்டிய படம் கஸ்திஜி: தி ஹரிசோன். விவசாயம் பொய்த்து விட்டதால் மராட்டிய கிராமங்களிலிருந்து நகரத்துக்கு இடம்பெயறும் மக்களின் வாழ்க்கையை சொன்ன படம். இதனை மனோஜ் கடமாத் இயக்கி இருந்தார்.
உபேந்திரா லிமயா, மனோஜ் ஜோஷி, வித்யாகர் ஜோஷி, சஞ்சய் மோன், கச்சான் ஜாதவ், ராஜ்குமார் தாண்டே, குழந்தை நட்சத்திரம் வைஷ்ணவி தாண்டே உள்பட பல முன்னணி மராட்டிய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். பகிலேந்திர பரவ் இசை அமைத்திருந்தார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் மிகுந்த கவனம் பெற்றது. விருதுகளும் வாங்கியது. தற்போது மராட்டிய மாநில அரசு திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இதில் இந்தப் படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ள ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கு ரசூல்பூக்குட்டி லைவ் ஒலிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரசூல்பூக்குட்டி தற்போது ஒரு கதை சொல்லட்டுமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது.