‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிரஞ்சீவியின் 151 படமாக 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற படம் உருவாகி வருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கிவரும் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, இவர்களுடன் கதாநாயகியாக நயன்தாரா என பிரமிக்க வைக்கும் நட்சத்திர கூட்டணி கைகோர்த்துள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரலாற்றுப்படமாக உருவாகி வரும் இதில் சிரஞ்சீவி, நயன்தாரா இருவரும் திருமணம் செய்துகொள்வது போலவும் அதை அருகில் ராஜகுரு தோற்றத்தில் அமர்ந்துள்ள அமிதாப் பச்சன் பார்ப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.