டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோலியின் வெற்றியில் அனுஷ்காவிற்கு உயரிய பங்கு இருக்கிறது என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போபர்ஸ்.