ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதன் முதலில் நடிக்கும் தெலுங்குப் படமான 'சை ரா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அவர் நடிக்க உள்ளார். இது பற்றி அமிதாப் அவருடைய பிளாக்கில் கூறியிருப்பதாவது,
“அன்பு நண்பர் சிரஞ்சீவி, ஆந்திராவின், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபலமானவர், அவருடைய பிரம்மாண்டப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க என்னை அழைத்தார். மிகவும் வீரமான சரித்திரக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் படத்தில் நடிக்க அழைத்த போது நானும் சம்மதித்தேன். இன்னும் சில மணி நேரங்களில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்கான சோதனை தோற்றம்தான் இது. இது இறுதியானதல்ல, ஆனால் கிட்டத்தட்ட இருக்கும் தோற்றம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத் தோற்றத்தில் அமிதாப் மிகவும் வயதானவராக நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கிறார். பார்ப்பதற்கு பீஷ்மர் தோற்றத்தில் இருக்கிறார்.
இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.