'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான். 1988-ம் ஆண்டு சலாம் பாம்பே படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பாலிவுட் மட்டுமல்லாது ஜூராசிக் வேர்ல்டு, தி ஜங்கிள் புக் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். வித்தியாசமான வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார் இர்பான்.
சில தினங்களுக்கு முன்னர் தனக்கு வித்தியாசமான நோய் ஏற்பட்டிருப்பதாகவும், இதுப்பற்றி விரைவில் நானே சொல்கிறேன் என்று கூறியிருந்தார் இர்பான்.
இந்நிலையில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் டியூமர் என்ற நோய் தாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அனைவரின் பிரார்த்தனை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதன் சிகிச்சைக்காக வெளிநாடு சொல்ல உள்ளேன். நியூரோ என்பது மூளை சம்பந்தப்பட்ட நோய் அல்ல, இதுப்பற்றி கூகுள் வழியாக தெரிந்து கொள்ளலாம். திரும்ப வந்து நிறைய கதைகளை சொல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் இர்பான்.