மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹீரோபந்தி, தில்வாலே உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், பாலிவுட் நடிகை, கீர்த்தி சனோன். 2014ம் ஆண்டிலேயே நடிக்க வந்தாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தனக்கு பொருத்தமான கேரக்டர் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார்.
சமீபகாலமாக, பொது நிகழ்ச்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தன், தங்கை நுாபுரையும் உடன், அழைத்து வருகிறார். திரையுலக பிரபலங்களுக்கு, தங்கையை அறிமுகப்படுத்துகிறார். 'படங்களில் நடிக்க, தங்கைக்கு வாய்ப்பு தேடுகிறீர்களா' என,
கேட்டால், ''அதெல்லாம் ஒன்றும் இல்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் தங்கையை,
வெளியில் அழைத்து வருகிறேன்; அவ்வளவு தான்,'' என, அப்பட்டமாக, பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.