பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே அவரது மகள் ஜான்வி கபூர் தாதக் -என்ற இந்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு மகளை ஜிம்மில் சில மாதங்களாக பயிற்சி எடுக்க வைத்த பின்னரே கேமரா முன்பு கொண்டு வந்தார் ஸ்ரீதேவி.
அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் ஜான்விகபூர் நடித்து வந்தபோது திடீரென்று ஸ்ரீதேவி மரண மடைந்ததால் சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தொடர்ந்து உடம்பை பராமரித்து வந்த ஜான்விகபூர், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு கொஞ்சம் வெயிட் போட்டு விட்டாராம். அதனால் தற்போது மறுபடியும் அவர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.