'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் நடித்து வந்த ரகுல்பிரீத்சிங்கிற்கு தமிழில் எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சமயம் பார்த்து சமந்தா தமிழுக்கு வந்ததால் தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் ரகுல்பிரீத்சிங்.
இருப்பினும் தன்னை முதல்தரநாயகி இடத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் எதிர்பார்த்த ஸ்பைடர் படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் அதன்பிறகு தெலுங்கில் அவருக்கு படங்கள் இல்லை. ஆனால் தமிழில் சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்தில் இணைகிறார்.
இந்த நேரத்தில் இந்தியில் அவர் நடித்த அய்யாரி படமும் அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இருப்பினும் தற்போது அஜய்தேவ்கனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். ரொமான்ஸ் காமெடி கலந்த கதையில் உருவாகும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய நாயகியாக தபு நடிக்கிறார்.
இந்த படத்தில் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயல்களுக்கு இணையாக கவர்ச்சி அவதாரம் எடுக்க தயாராகி விட்ட ரகுல்பிரீத்சிங், அடுத்தபடியாக மேலும் சில இந்தி படங்களையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக மும்பையிலேயே முகாமிட்டுள்ளார்.