அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
திருமணத்துக்கு பின்னும், நடிப்பதில் தீவிரம் காட்டி வந்த, கரீனா கபூர், கர்ப்பமானதும், படங்களில் நடிப்பதை குறைத்தார். பின், குழந்தை பிறந்ததும், நடிப்பில் மீண்டும் முழுவீச்சில் களமிறங்கினார்.
ஓய்வில்லாத நடிப்பும், வெளிப்புற படப்பிடிப்பும், கரீனாவை, ரொம்பவே களைப்பாக்கி விட்டது போலிருக்கிறது. தற்போது, அவர் நடிக்கும், வீர் தி வெட்டிங் படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தானில் நடக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும், கோடை விடுமுறையை கொண்டாட, கணவர், சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளார், கரீனா.
அடுத்த ஒரு மாதத்துக்கு, என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. வெளிநாட்டிலும், யார் கண்ணிலும் தென்படாத ஓர் இடத்தில், கணவர், குழந்தையுடன், விடுமுறையை
கழிக்கப் போகிறேன் என்கிறார், கரீனா.