இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெய் லவ குசா படத்தில் மூன்று வேடங்களில் நடித்த ஜூனியர் என்டிஆர், பின்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதையடுத்து தனது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தவர், அடுத்தபடியாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது.
ஜூனியர் என்டிஆர் - லட்சுமி பிரணதி தம்பதிக்கு அபய்ராம் என்கிற 4 வயது மகன் உள்ளார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆரின் மனைவி லட்சுமி பிரணதி தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். இன்னும் சில மாதங்களில் அதாவது 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது மனைவி லட்சுமி பிரணதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். அதனால் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு வருகிறாராம் ஜூனியர் என்டிஆர்.